கார் விபத்தில் உயிர்தப்பிய ‘ஸ்வதேஷ்’ நடிகை

By செய்திப்பிரிவு

மும்பை: இந்தியில், அஷுதோஷ் கோவரிக்கர் இயக்கிய ‘ஸ்வதேஷ்’ படத்தில் ஷாருக்கான் ஜோடியாக நடித்தவர், காயத்ரி ஜோஷி.

இதில் நடித்ததற்காகப் பாராட்டுகளைப் பெற்ற அவர், பின்னர் தொழிலதிபர் விகாஸ் ஓபராய் என்பவரை திருமணம் செய்துகொண்டு சினிமாவில் இருந்து விலகினார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் இத்தாலி சென்றுள்ள இவர் தனது கணவருடன் லம்போர்கினி காரில் சென்றுகொண்டிருந்தார். சர்டினியா என்ற இடத்தில் சென்றபோது, முன்னே சென்ற வேனை ஒரே நேரத்தில் லம்போகினி காரும் அருகில் வந்த பெராரி காரும் முந்த முயன்றபோது திடீர் விபத்து ஏற்பட்டது. இதில் பெராரி கார் மோதிய வேகத்தில் தீப்பிடித்தது. அதில் இருந்த, சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த கணவன்- மனைவி உயிரிழந்தனர். “நானும் விகாஸும் இந்த விபத்தில் கடவுள் அருளால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினோம்” என்று காயத்ரி ஜோஷி தெரிவித்துள்ளார். இந்த விபத்து குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

16 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்