கொச்சி: ரோஷன் மேத்யூ, தர்ஷனா ராஜேந்திரன் நடிப்பில் பிரபல இலங்கை இயக்குநர் பிரசன்னா விதானகே இயக்கியுள்ள மலையாளப் படம், ‘பாரடைஸ்’. 2022-ம் ஆண்டில் இலங்கை எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடி, அதைத் தொடர்ந்து எரிபொருள், அத்தியாவசியப் பொருட்களுக்கு ஏற்பட்ட தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு ஆகியவை இலங்கையில் நாடு தழுவிய போராட்டம் வெடிப்பதற்குக் காரணமாக இருந்தது. இந்த நேரத்தில் தங்கள் 5-வது திருமண நாளை கொண்டாட அங்குச் செல்கிறார்கள், கேரள தம்பதிகள். அப்போது அங்கு அவர்கள் எதிர்கொள்ளும் நிகழ்வுகள்தான் இந்தப் படம். இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினைகளையும் அங்குள்ள மலையகத் தமிழர்களின் வாழ்க்கை நிலையையும் இந்தப் படம் பேசுகிறது என்கிறார்கள் தயாரிப்பாளர்கள் ஆன்டோ சிட்டிலப்பள்ளி, ஸனிதா சிட்டிலப்பள்ளி.
ராஜீவ் ரவி ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு, கே இசை அமைத்துள்ளார். படத்தை மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் வழங்குகிறது. இந்தப் படம், தென் கொரியாவின் புசான் சர்வதேச திரைப்பட விழாவில் வரும் 7ம் தேதி திரையிடப்படுகிறது. இந்த விழாவில் வழங்கப்படும் ‘கிம் ஜெசோக்’ விருதுக்கும் இந்தப் படம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது
முக்கிய செய்திகள்
சினிமா
8 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
19 hours ago