திருவனந்தபுரம்: ரஜினி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று (அக்.4) திருவனந்தபுரத்தில் பூஜையுடன் தொடங்கியுள்ளது. இது தொடர்பான புகைப்படங்களை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
‘ஜெயிலர்’ வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் அடுத்தடுத்து இரண்டு படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். இதில் லைகா தயாரிக்கும் ‘ரஜினி 170’ படத்தை ‘ஜெய்பீம்’ ஞானவேல் இயக்குகிறார். இந்தப் படத்தில் ரஜினியுடன், 32 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் அமிதாப் பச்சன் நடிக்கிறார். அவர் தவிர, ஃபஹத் ஃபாசில், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, ரித்திகா சிங் உள்ளிட்ட நடிகர் பட்டாளமே களமிறங்குகிறது. படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.
இப்படத்தில் ரஜினியின் கதாபாத்திர லுக்கை லைகா வெளியிட்டது. அதில் கோட், சூட், கூலிங் கிளாஸ் அணிந்தபடி ஸ்டைலிஷ் ஆன தோற்றத்தில் ரஜினியின் லுக் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில் திருவனந்தபுரத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது.
» அமிதாப் பச்சனுக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிக்க கோரும் சிஐஏடி
» “என் படத்தை யார் பார்ப்பார்கள் என்று கேட்டனர்” - மேடையில் கலங்கிய சித்தார்த்
இது தொடர்பாக தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த், மஞ்சுவாரியர், ரக்ஷன், இயக்குநர் ஞானவேல் உள்ளிட்டோருடன் படக்குழுவினர் இடம்பெற்றுள்ளனர். மேலும் இதில் ரஜினி குத்துவிளக்கு ஏற்றும் படங்களை ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர். இந்தப் படத்துக்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜுடன் இணைய உள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago