மும்பை: தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வருகிறார் தமன்னா.‘ஜெயிலர்’ படத்தில் அவர் நடித்த ‘காவாலா’ பாடல் சூப்பர் ஹிட்டானது.இப்போது இந்தி வெப் தொடர்களில் கவனம் செலுத்தி வரும் அவர், தென்னிந்திய படங்களில் இருந்து விலகி இருப்பது ஏன் என்று தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:
தென்னிந்திய சினிமாவில், சில ஃபார்முலாக்கள் இருக்கின்றன. அவை எளிதானவை. சில கமர்சியல் படங்களில், எனது கதாபாத்திரங்களுடன் என்னால் பொருந்த முடியவில்லை. இயக்குநர்களிடம் அதைக் குறைக்கும்படி கேட்டிருக்கிறேன். சகிக்க முடியாத அளவுக்கு ஆணாதிக்கத்தைக் கொண்டாடும் படங்களில் நடிக்காமல் இருக்க முயற்சி செய்யத் தொடங்கினேன்.
தென்னிந்திய சினிமாவில் கிடைத்த வெற்றி இந்தியில் எனக்கு கிடைக்கவில்லையே என்று கேட்கிறார்கள். அதை தனிப்பட்ட தோல்வியாக எடுத்துக் கொள்ளவில்லை. ஏனென்றால் ஒரு படம் பலரின் பங்களிப்புடன் உருவாகிறது.
அந்த வகையில் எனது வெற்றி, தோல்வி இரண்டில் இருந்தும் விலகி இருக்கிறேன். சினிமாவுக்கு வந்து 17 வருடங்களுக்குப் பிறகும் ஒவ்வொரு நாளும் கேமராவை எதிர்கொள்ளும் ஆசையுடன் எழுகிறேன். நடிப்பது எனது விருப்பம். அது என்னை மிகவும் உற்சாகப் படுத்துகிறது.
» விஷ்ணுமாயா கோயில் கட்டளைதாரராக குஷ்பு நியமனம்
» ‘வாலி’ இந்தி ரீமேக் விவகாரம்: உயர் நீதிமன்ற அனுமதி பெற்றுவர மாஸ்டர் நீதிமன்றம் உத்தரவு
இவ்வாறு தமன்னா தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
2 mins ago
சினிமா
45 mins ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago