’ரஜினி 170’ படத்தில் துஷாரா விஜயன்

By செய்திப்பிரிவு

சென்னை: ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிக்க உள்ள புதிய படத்தில் துஷாரா விஜயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

ரஜினியின் 170வது படத்தை ‘ஜெய்பீம்’ படத்தை இயக்கிய ஞானவேல் இயக்க உள்ளார். இந்தப் படத்தை லைகா தயாரிக்கிறது. இதில் ரஜினியுடன் பல்வேறு முன்னணி பிரபலங்கள் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முதல் படத்தில் பணியாற்றும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விபரத்தை லைகா நிறுவனம் வெளியிட்டு வருகிறது. அதன் படி ரஜினி 170 படத்தில் நடிகை துஷாரா விஜயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.

பா.ரஞ்சித் இயக்கிய ‘சார்பட்டா பரம்பரை’, ‘நட்சத்திரம் நகர்கிறது’ ஆகிய படங்களின் மூலம் பிரபலமானவர் துஷாரா. சமீபத்தில் அருள்நிதி நடிப்பில் வெளியான ‘கழுவேத்தி மூர்க்கன்’ படத்தில் கதாநாயகியாக நடித்து பாராட்டப்பட்டார். ரஜினி 170 படப்பிடிப்பு அக்டோபர் முதல் வாரத்தில் திருவனந்தபுரத்தில் நடக்க உள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து படத்தில் நடிக்க இருக்கும் நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த தகவல்களை படக்குழு வெளியிட உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

6 mins ago

சினிமா

40 mins ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

மேலும்