நடிகர் விஜய் பேசியதாக பரவும் ஆடியோ: புஸ்ஸி ஆனந்த் எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

நடிகர் விஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ' திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப்படம் அக்டோபர் 19 ம் தேதி வெளியாகிறது.

இந்நிலையில் நடிகர் விஜய் பேசியதாக சமூக வலைதளத்தில் ஆடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. அதில், "தமிழ்நாட்டு விவசாயிகளை அழிக்க நினைக்கும் கர்நாடகாவில் தற்போது நடந்து கொண்டிருக்கும் காவிரி பிரச்சினையின் காரணமாகவும், நடிகர் சித்தார்த்துக்கு எதிர்ப்புத் தெரிவித்த கன்னட அமைப்பினருக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாகவும் என் ‘லியோ' படத்தை கர்நாடகாவில் திரையிடப் போவதில்லை. இதையே கர்நாடகா மீண்டும் மீண்டும் செய்தால் 2026-ல் மிகப்பெரிய விளைவைச் சந்திக்க வேண்டி வரும்" என கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து விஜய் மக்கள் இயக்க மாநில பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கூறும்போது, நடிகர் விஜய் பேசியதாகப் பரப்பப்படும் ஆடியோவுக்கும் அவருக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. இதில் அவர் பேசியதாகத் தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது. அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்