ஹைதராபாத்: ‘கேஜிஎஃப்’ பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் ‘சலார்’ திரைப்படம் வரும் டிசம்பர் 22ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
‘கேஜிஎஃப் 2’ படத்துக்குப் பிறகு பிரசாந்த் நீல் இயக்கும் படம், ‘சலார்’. ஹோம்பாளே பிலிம்ஸ் சார்பில் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமானப் பொருட்செலவில் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். இதில் பிரபாஸ், ஸ்ருதிஹாசன், பிருத்விராஜ், ஜெகபதி பாபு உட்பட பலர் நடிக்கின்றனர்.
தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாள மொழிகளில் வெளியாக இருக்கிறது. கடந்த 28-ம் தேதி வெளியாக இருந்த இந்தப் பதவிர்க்க முடியாத காரணங்களால் தள்ளி வைக்கப்பட்டதாகவும், புதிய ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் படக்குழு சமீபத்தில் அறிவித்தது.
படத்தின் ரிலீஸ் எப்போது என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்த நிலையில், ‘சலார்’ திரைப்படம் வரும் டிசம்பர் 22ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
» "அனைத்து கன்னடர்கள் சார்பில் மன்னிப்பு கேட்கிறேன் சித்தார்த்.." - பிரகாஷ் ராஜ்
» பெங்களூருவில் நடிகர் சித்தார்த்தை சூழ்ந்து கன்னட அமைப்பினர் முழங்கியதால் பரபரப்பு
படத்தின் கிளைமாக்ஸ் உள்ளிட்ட சில காட்சிகளை, ரீ-ஷூட் செய்ய பிரசாந்த் நீல் திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கு தயாரிப்பு தரப்பில் அதற்குச் சம்மதம் தெரிவித்ததால், இப்போது அதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago