சென்னை: விஜய் நடித்துள்ள ‘லியோ’ படத்தின் 2-வது சிங்கிள் பாடலான ‘Badass’ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் ‘லியோ’. இந்தப் படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், பிரியா ஆனந்த், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலி கான் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரிக்கிறது. வரும் அக்டோபர் 19-ம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாக உள்ளது.
விஜய்யின் பிறந்த நாளான கடந்த ஜூன் 22 ஆம் தேதி ‘லியோ’ படத்தின் முதல் சிங்கிளான ‘நான் ரெடி’ பாடலை படக் குழு வெளியிட்டது. இந்தப் பாடலை அனிருத் இசையில் நடிகர் விஜய், அனிருத், அசல் கோலார் ஆகியோர் பாடியுள்ளனர். பாடல் வரிகளை விஷ்ணு எடவன் எழுதியுள்ளார். இப்பாடல் நல்ல வரவேற்பை பெற்றது.
இதனிடையே, ’லியோ’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து அதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், அதன் இசை வெளியீட்டு விழா குறித்து ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து வருகின்றனர். ஆனால், பாதுகாப்பு காரணங்களுக்காக இசை வெளியீட்டு விழா நடைபெறாது என படக்குழு அறிவித்தது. இதனால் ஒவ்வொரு பாடலாக படக்குழு வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இரண்டாவது சிங்கிளான ‘Badass’ பாடல் தற்போது வெளியாகியுள்ளது.
பாடல் எப்படி? - நாயகனின் மாஸை கூட்டும் வகையில் அமைந்துள்ள இந்தப் பாடல் துள்ளலான இசையுடன் உருவாகியுள்ளது. விஷ்ணு எடவனின் வரிகள் பாடலின் அடர்த்தியை கூட்டுகின்றன. உதாரணமான ‘சிங்கம் எறங்குனா காட்டுக்கு விருந்து, இவன் வேட்டைக்கு சிதறணும் பயந்து’, ‘இதுவரையில நல்லவ இருந்தான், இந்த கதையில ராட்சஷன் புகுந்தான்’, ‘ஒரசாம ஓடிடு’, ‘வாழ சுருட்டிடு’ என நாயகனை புகழும் பாடலாக ‘படாஸ்’ உருவாகியுள்ளது. அனிருத்தின் எனர்ஜி மிகுந்த குரல் பாடலின் தரத்தையும் சவுண்டையும் கூட்டியிருக்கிறது. பாடல் வீடியோ;
» ‘மகாநதி’யை விட இந்தப் படம் மிகவும் பிடித்திருக்கிறது” - ‘சித்தா’வுக்கு கமல் பாராட்டு
» ஆக்ஷனுடன் தந்தை - மகன் உறவு: ரன்பீர் - ராஷ்மிகாவின் ‘அனிமல்’ டீசர் எப்படி?
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
3 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago