ஜப்பான் பனி திருவிழாவில் சாய் பல்லவி பட ஷூட்டிங்

By செய்திப்பிரிவு

மும்பை: தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சாய் பல்லவி. இப்போது இந்தி சினிமாவில் அறிமுகமாக இருக்கிறார். பிரபல பாலிவுட் நடிகர் அமீர் கான் மகன் ஜுனைத் கான் ஜோடியாக நடிக்க இருக்கிறார்.

யஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் ‘மகாராஜ்’ என்ற தனது முதல் படத்தில் நடித்து முடித்துள்ளார் ஜுனைத் கான். இந்தப் படம் நெட்பிளிக்ஸில் விரைவில் வெளியாக உள்ளது. தனது இரண்டாவது படத்தில் சாய் பல்லவியுடன் ஜோடி சேர்கிறார் ஜுனைத் கான். சுனில் பாண்டே இயக்கும் இது, காதல் படமாக உருவாகிறது. இதுகுறித்த தகவல்கள் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாயின.

இந்நிலையில், இதன் படப்பிடிப்பு, ஜப்பானில் நடக்க இருக்கிறது. அங்குள்ள சப்போராவில் ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி மாதம் நடக்கும் பனி திருவிழா பிரபலம். உலகம் முழுவதும் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வருவது வழக்கம். இந்த திருவிழாவில் இதன் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது. இங்கு இதற்கு முன் எந்த இந்திய திரைப்படமும் படமாக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

16 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்