ராஷ்மிகாவை இயக்குகிறார் ராகுல் ரவீந்திரன்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழில், மாஸ்கோவின் காவிரி படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் ராகுல் ரவீந்திரன். இந்தப் படத்தில்தான் நடிகை சமந்தாவும் அறிமுகமானார். இதையடுத்து விண்மீன்கள், சூரிய நகரம், வணக்கம் சென்னை, தி கிரேட் இண்டியன் கிச்சன் ஆகிய படங்களில் நடித்த ராகுல் ரவீந்திரன், தெலுங்கு படங்களிலும் நடித்துவருகிறார். அங்கு ‘மன்மதடு 2’ உட்பட இரண்டு படங்களை இயக்கியுள்ள அவர், மீண்டும் படம் இயக்குகிறார்.

நாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட கதையான இதில், நடிகை சமந்தா, நாயகியாக நடிப்பதாக இருந்தது. அவர் தசை அழற்சிக்காக ஓய்வில் இருப்பதால், ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்க இருக்கிறார். ஜிஏ2 பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.

‘புஷ்பா 2’ படத்தில் நடித்து ராஷ்மிகா, அடுத்து தமிழ், தெலுங்கில் உருவாகும் ‘ரெயின்போ’ படத்தில் நடிக்கிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்