இயக்குநர் பாலா தற்போது 'வணங்கான்' படத்தை இயக்கி வருகிறார். அருண் விஜய் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில், ரோஷினி பிரகாஷ் நாயகியாக நடிக்கிறார். மேலும், சமுத்திரக்கனி, மிஷ்கின் உட்பட பலர் நடிக்கின்றனர். வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி, மற்றும் பாலாவின் பி ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்கிறார். இதன் முதல் தோற்ற போஸ்டர் நேற்று வெளியானது.
கிணற்றுக்குள் இருந்து சகதியுடன் வெளியே வரும் அருண் விஜய், ஒரு கையில் பிள்ளையாரையும் மறு கையில் பெரியாரையும் தூக்கி வைத்திருக்கிறார். இந்தத் தோற்றம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதுதொடர்பாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வெளியிட்டுள்ளப் பதிவில், “இயக்குநர் பாலாவின் இதுவரையிலான படைப்புகள் மக்கள் மத்தியில் அதிர்வுகளை உருவாக்கியுள்ளன. அதே போல ‘வணங்கான்’ படத்தில், பெரும் அதிர்வை ஏற்படுத்தும் ஒரு கதையைத் தொட்டிருக்கிறார் என்பது மட்டும் நிச்சயம். சகோதரர் அருண்விஜய்க்கு மற்றுமொரு பெயர் சொல்லும் அவதாரம்” என்று தெரிவித்துள்ளார்
முக்கிய செய்திகள்
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago