நடிகை நயன்தாரா நடித்துள்ள ‘ஜவான்’ படம் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது. அடுத்து அவர் ஜெயம் ரவியுடன் நடித்துள்ள ‘இறைவன்’ படம் வெளியாக இருக்கிறது. இந்தப் படங்களை அடுத்து நிலேஷ் கிருஷ்ணா இயக்கும் படம், தயாரிப்பாளர் சஷிகாந்த் இயக்கும் ‘டெஸ்ட்’படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் பிரபாஸ் ஜோடியாக பான் இந்தியா படம் ஒன்றில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
பிரபல தெலுங்கு நடிகர் விஷ்ணு மஞ்சு, ‘கண்ணப்பா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் பிரபாஸ் சிவனாக நடிக்கிறார். இதை விஷ்ணு மறைமுகமாக உறுதிப்படுத்தி இருந்தார். இந்தப்படத்தை முகேஷ் சிங் இயக்குகிறார். நுபுர் சனோன் இதில் நாயகியாக ஒப்பந்தமாகி இருந்தார். ஆனால், அவர் திடீரென விலகிவிட்டார். இதனால் வேறு நாயகியைத் தேடி வருகின்றனர். இதற்கிடையே இதில், நயன்தாரா பார்வதியாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. படக்குழு இதை உறுதிப்படுத்தவில்லை.
நயன்தாராவும் பிரபாஸும் விவி.விநாயக் இயக்கத்தில் ‘யோகி’ என்ற படத்தில் நடித்திருந்தனர். இந்தப் படம் 2007ம் ஆண்டு வெளியானது
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago