தமிழுக்கு வரும் மலையாள இயக்குநர்

By செய்திப்பிரிவு

சென்னை: பிரபல மலையாள இயக்குநர் அனில், 'சாயாவனம்' படம் மூலம் தமிழுக்கு வருகிறார். 40-க்கும் மேற்பட்ட படங்களை மலையாளத்தில் இயக்கியுள்ளார் இவர். தாமோர் சினிமா சார்பில் சந்தோஷ் தாமோதரன் தயாரிக்கும் இந்தப் படத்தில் சவுந்தரராஜா, தேவானந்தா மற்றும் அப்புக்குட்டி உள்ளிட்டோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் தாமோதரன், ஜானகி, வெற்றிவேல் ராஜா, மேத்யூ மம்ப்ரா முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

படம் பற்றி இயக்குநர் அனில் கூறும்போது, “மூடுபனி, மழை மற்றும் காடுகளின் பின்னணியில் படமாக்கப்பட்ட முதல் தமிழ்ப் படம் இது என நினைக்கிறேன். படத்தில் வரும் கதாபாத்திரங்களின் மனநிலையைப் பிரதிபலிக்கும் விதமாக இயற்கை பயன்படுத்தப்பட்டுள்ளது. பெண்களை மையப்படுத்தும் கதையான இது தமிழ் சினிமாவுக்குப் புதிதாக இருக்கும். படத்தின் பெரும்பகுதி சிரபுஞ்சியில் படமாக்கப்பட்டது" என்றார்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

15 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்