சென்னை: ஹரீஷ் கல்யாண், இந்துஜா நடித்துள்ள படம் ‘பார்க்கிங்’. எம்.எஸ்.பாஸ்கர், பிரார்த்தனா, இளவரசு உட்பட பலர் நடித்துள்ளனர். பார்க்கிங் பிரச்சினையை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தப் படத்தை சோல்ஜர்ஸ் பிலிம் பேக்டரி மற்றும் பேஷன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது. இந்தப் படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கியுள்ளார். சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார்.
இந்தப் படம் வரும் 28-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று படக்குழு தெரிவித்துள்ளது