முகேஷ் அம்பானி வீட்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் அட்லீ, நயன்தாரா, விக்னேஷ் சிவன்!

By செய்திப்பிரிவு

மும்பை: முகேஷ் அம்பானியின் வீட்டில் நடந்த ‘விநாயகர் சதுர்த்தி’ கொண்டாட்டத்தில் அட்லீ, நயன்தாரா, விக்னேஷ் சிவன் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

தொழிலதிபர் முகேஷ் அம்பானியும், அவரது மனைவி நீடா அம்பானியும் இணைந்து மும்பையில் உள்ள அவர்களது வீட்டில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இதில் ஏராளமான பாலிவுட் திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

பாலிவுட் பிரபலங்கள் நிறைந்து காணப்பட்ட விழாவில் கோலிவுட்டிலிருந்து நயன்தாரா அவரது கணவர் விக்னேஷ் சிவனுடன் நிகழ்வில் கலந்துகொண்டார். அட்லீயும் அவரது ப்ரியா அட்லீயும் கலந்துகொண்டனர். பாலிவுட் பிரபலங்கள் மத்தியில் ராஷ்மிகா மந்தனா மற்றும் பூஜா ஹெக்டே ஆகியோரும் நிகழ்வில் இருந்தனர்.

ஷாருக்கான் தனது குடும்பத்துடன் வருகை தந்திருந்த நிகழ்வில், விக்கி கவுஷல், ஆயுஷ்மான் குரானா, அதியா ஷெட்டி, ரன்வீர் சிங், தீபிகா படுகோன், ஆலியா பட், ஜூஹி சாவ்லா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றனர். ‘ஜவான்’ படத்தின் வெற்றி அட்லீக்கு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திகொடுத்துள்ளதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். புகைப்படத் தொகுப்பு இங்கே > நயன் முதல் ஷாருக் வரை - முகேஷ் அம்பானி வீட்டு நிகழ்வில் பிரபலங்கள் | ஆல்பம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

மேலும்