‘கான்ஜூரிங் கண்ணப்பன்’ படத்துக்காக பிரம்மாண்ட அரண்மனை செட்!

By செய்திப்பிரிவு

சென்னை: அறிமுக இயக்குநர் செல்வின் ராஜ் சேவியர் இயக்கும் திரைப்படம், 'கான்ஜூரிங் கண்ணப்பன்'. ஏஜிஎஸ் நிறுவனம் சார்பில் கல்பாத்தி எஸ்.அகோரம், கல்பாத்தி எஸ்.கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிக்கும் இந்தப் படத்தில், சதீஷ், நாசர், சரண்யா பொன்வண்ணன், ஆனந்தராஜ், ரெஜினா கசன்ட்ரா, விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லீ, எல்லி அவ்ரம், ஜேஸன் ஷா உட்பட பலர் நடித்துள்ளனர்.

படம் பற்றி இயக்குநர் செல்வின் ராஜ் சேவியர் கூறும்போது, “இது ஹாரர், காமெடி படம். ஆனால், வழக்கமான ஹாரர், காமெடி படமாக இருக்காது. இதன் கதையும் புதுமையாக இருக்கும். ஹாலிவுட் ஸ்டைலில் சில விஷயங்களைச் சொல்லி இருக்கிறோம். ரசிகர்களுக்குப் பொழுதுபோக்குடன் புதுமையானதாக இருக்கும். குழந்தைகள் பார்த்து ரசிக்கும் வகையிலும் நகைச்சுவை, திகில், ஃபான்டசி கலந்த படமாக உருவாக்கியுள்ளோம். பிளாஷ்பேக் காட்சிக்காகப் பிரம்மாண்ட அரண்மனை செட் அமைத்தோம். இதற்குப் பெரிய செலவுதான். சிறந்த படத்தைக் கொடுக்க வேண்டும் என்பதற்காகத் தயாரிப்பாளர்கள் அதைப் பற்றி கவலைப்படாமல் செலவழித்துள்ளனர். பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்துவிட்டது. போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடந்துவருகின்றன” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

மேலும்