கிரைம் த்ரில்லராக உருவாகும் ‘எனக்கு என்டே கிடையாது’

By செய்திப்பிரிவு

ஹங்க்ரி வுல்ஃப் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் கார்த்திக் வெங்கட்ராமன் தயாரித்துள்ள படம், ‘எனக்கு என்டே கிடையாது’. விக்ரம் ரமேஷ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி முதன்மை கதாபாத்திரங்களில்ஒருவராக நடித்துள்ளார். தயாரிப்பாளரான கார்த்திக் வெங்கட்ராமன் இன்னொரு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

கதாநாயகியாக ஸ்வயம் சித்தா நடித்துள்ளார். சிவகுமார் ராஜு, முரளி சீனிவாசன், சக்திவேல்உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தளபதி ரத்னம் ஒளிப்பதிவு செய்துள்ளார். கலாச்சரண் இசையமைத்துள்ளார்.

படம் பற்றி கார்த்திக் வெங்கட்ராமன் கூறும்போது, “நண்பர்கள் உதவியுடன் இந்தப்படத்தைத் தயாரித்து நடித்துள்ளேன். இதன் இயக்குநர் விக்ரம்,அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளில் ஐடி துறையில் பணியாற்றியவர். அவரும் நானும் இதில் முதன்மை கதாபாத்திரங்களாக நடித்துள்ளோம். எங்களைத் தவிர படத்தில் நடித்துள்ளவர்களும் பணியாற்றியவர்களும் அனுபவசாலிகள்.

தேவையில்லாத விஷயத்தில் தலையிட்டு சிக்கலில் மாட்டிக் கொள்ளக் கூடாது என்கிற கருத்தை மையப்படுத்தி இந்தப் படத்தை உருவாக்கியுள்ளோம். ஹாலிவுட் படமான ‘ஹேங்க் ஓவர்’ மாதிரி இதுவும் விறுவிறுப்பாக இருக்கும். ஆரம்பித்த 5-வது நிமிடமே படம் பார்ப்பவர்களைக் கதைக்குள் இழுத்து சென்றுவிடும். டார்க் காமெடி கலந்த க்ரைம் திரில்லராக உருவாகி உள்ளது. படத்தை ஜெனீஷ் வெளியிடுகிறார்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

54 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்