SIIMA Awards 2023 | சிறந்த நடிகர் ஜூனியர் என்டிஆர், சிறந்த படம் ‘சீதாராமம்’ - முழுமையான பட்டியல் 

By செய்திப்பிரிவு

துபாய்: ஆண்டுதோறும் வழங்கப்படும் SIIMA விருதுகள் விழாவில் ‘ஆர்ஆர்ஆர்’ படத்துக்காக ஜூனியர் என்டிஆருக்கு சிறந்த நடிகர் விருதும், ‘சீதாராமம்’ படத்துக்கு சிறந்த திரைப்படத்துக்கான விருதும் வழங்கப்பட்டது.

தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் என்று அழைக்கப்படும் SIIMA விருதுகள் கடந்த 2012 முதல் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு பெங்களூருவில் நடந்த இந்த விழா இந்த ஆண்டு துபாயில் உள்ள உலக வர்த்தக மையத்தில் நடைபெற்றது. இதில் தென்னிந்திய சினிமா பிரபலஙகளுக்கு பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டது. விருது பெற்றவர்களின் முழுமையான பட்டியல் இதோ:

தெலுங்கு

சிறந்த நடிகர் : ஜூனியர் என்டிஆர் (ஆர்ஆர்ஆர்)
சிறந்த இயக்குநர் : ராஜமவுலி (ஆர்ஆர்ஆர்)
சிறந்த படம்: சீதாராமம்
சிறந்த அறிமுக நடிகை: மிருணல் தாகூர் (சீதாராமம்)
ஃப்ளிப்கார்ட் ஃபேஷன் யூத் ஐகான்: ஸ்ருதிஹாசன்
சிறந்த அறிமுக தயாரிப்பாளர்கள்: ஷரத்,அனுராக் (மேஜர்)
நம்பிக்கையூட்டும் புதுமுகம் : பெல்லம்கொண்டா கணேஷ்
சிறந்த நடிகர் (விமர்சகர்கள் தேர்வு) : அதிவிசேஷ்
சிறந்த நடிகை : ஸ்ரீலீலா (தமாகா)
சிறந்த நடிகை (விமர்சகர்கள் தேர்வு) : மிருணல் தாகூர் (சீதாராமம்)
சிறந்த இசையமைப்பாளர் : எம்.எம்.கீரவாணி (ஆர்ஆர்ஆர்)
சிறந்த பாடலாசிரியர் : சந்திரபோஸ் (ஆர்ஆர்ஆர்)
சிறந்த பின்னணிப் பாடகர் : மிர்யாளா ராம் (டிஜே டில்லு)
சிறந்த பின்னணிப் பாடகி : மாங்க்லி (தமாகா)
சிறந்த அறிமுக இயக்குநர் : மல்லிடி வசிஷ்டா (பிம்பிசாரா)
சிறந்த துணை நடிகை : சங்கீதா (மசூதா)
சிறந்த காமெடி நடிகர் : ஸ்ரீனிவாச ரெட்டி (கார்த்திகேயா 2)

கன்னடம்

சிறந்த நடிகர் : யாஷ் (கேஜிஎஃப் 2)

சிறந்த நடிகர் (விமர்சகர்கள் தேர்வு) : ரிஷப் ஷெட்டி
சிறந்த படம் : 777 சார்லி
ஆண்டின் சிறந்த பேசுபொருள் : கார்த்திகேயா 2
சிறந்த வில்லன் நடிகர் : அச்யுத் குனார் (காந்தாரா)
சிறந்த நடிகை : ஸ்ரீநிதி ஷெட்டி (கேஜிஎஃப் 2)
சிறந்த நடிகை (விமர்சகர்கள் தேர்வு) : சப்தமி கவுடா (காந்தாரா)
சிறந்த துணை நடிகர் : திகந்த் மஞ்சாலே (காலிபட்டா 2)
சிறந்த துணை நடிகை : சுபா ரக்ஷா (ஹோம் மினிஸ்டர்)
சிறந்த அறிமுக தயாரிப்பாளர் : அபேக்ஷா புரோஹித் மற்றும் பவன் குமார் வடேயார் (டோலு)
சிறந்த அறிமுக நடிகர் : ப்ருத்வி ஷாமனூர்
சிறந்த அறிமுக நடிகை: நீதா அசோக் (விக்ராந்த் ரோணா)

சிறந்த ஒளிப்பதிவாளர்:புவன் கவுடா (கேஜிஎஃப் 2)

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE