சென்னை: நடிகர்கள் சிம்பு, தனுஷ், விஷால், அதர்வா ஆகிய நான்கு பேருக்கு ரெட் கார்டு விதிக்க தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் நேற்று (செப்.13) நடைபெற்றது. இதில் பல்வேறு விவகாரங்கள் பேசப்பட்டன. இந்த நிலையில் கூட்டத்தில் நடிகர்கள் சிம்பு, தனுஷ், விஷால், அதர்வா ஆகிய நான்கு பேருக்கும் ரெட் கார்டு விதிக்க முடிவு செய்யப்பட்டது. நடிகர் சிம்பு மீது ஏற்கனவே பலமுறை புகார்கள் அளித்தும் பேச்சு வார்த்தை நடத்தியும் முடிவடையாத மைக்கேல் ராயப்பன் பிரச்சனையை மேற்கோள்காட்டி அவருக்கு ரெட் கார்டு விதிக்க முடிவு செய்யப்பட்டது.
நடிகர் விஷால் தயாரிப்பாளர் சங்க தலைவராக இருந்தபோது சங்க பணத்தை முறையாக கையாளாதது தொடர்பாக அவருக்கு ரெட் கார்டு வழங்கப்பட்டது. நடிகர் தனுஷ் தேனாண்டாள் பிலிப்ம்ஸ் முரளி தயாரிக்கும் படத்தில் ஏற்கனவே 80 சதவீத படப்பிடிப்பு முடிந்த நிலையில் படப்பிடிப்புக்கு வராமல் தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் தனுஷுக்கு ரெட் கார்டு விதிக்கப்படுகிறது. மேலும் தயாரிப்பாளர் மதியழகன் கொடுத்த புகாரில் நடிகர் அதர்வா, முறையாக பதிலளிக்காமல் நழுவுவதால் அவருக்கும் ரெட் கார்டு வழங்குவதாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
15 mins ago
சினிமா
26 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago