“என் புதிய படத்துக்கு ரஹ்மான் இசை அமைக்கவில்லையே தவிர...” - பார்த்திபன் பகிர்வு 

By செய்திப்பிரிவு

சென்னை: “ஏ.ஆர்.ரஹ்மான் தூய்மையான இனிய மனிதர். அவருக்காக இந்தத் திரையுலகமே துணை நிற்கும்” என நடிகர் பார்த்திபன் ஆதரவுக்கரம் நீட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், “மறக்குமா நெஞ்சம்’ மக்களுக்கு ஏற்பட்ட இன்னல்கள் வருத்தத்திற்குரியது. நடத்தியவர்களின் பொறுப்பு அது. ஏ.ஆர்.ரஹ்மான் தூய்மையான இனிய மனிதர். அவரே மனம் மிக வருந்தி பொறுப்பை தானும் ஏற்றுக் கொள்வதாக முன் வந்திருக்கிறார். அவரின் மென்மையான மனமும் மேன்மையான குணமும் எனக்குத் தெரியும்!

என்னுடைய புதிய படத்துக்கு அவர் இசையமைக்கவில்லையே தவிர, கும்மிடிப்பூண்டியில் உள்ள அவரது ஸ்டூடியோவில் படபிடிப்பு நடந்தபோது அவரது மேனேஜர் சுகந்தனை அழைத்து “நான் பெரிதும் மதிக்கும் மிக சிறந்த கிரியேட்டர் பார்த்திபன், அவரின் மனம் நோகாமலும் முகம் சுளிக்காமலும் நடந்துக் கொள்ளுங்கள்” எனக் கூறியதாக ராஜ உபச்சாரம் எனக்கு.

தான் சம்மந்தப்படாத விஷயத்தில் கூட மற்றவர் மனம் நோகாதிருக்க நினைப்பவர், தான் சம்மந்தப்பட்ட நிகழ்ச்சியில் ஏற்பட்ட அசம்பாவிதத்திற்காக மனம் உடைந்திருப்பார். இனி இன்னும் கவனம் கொள்வார். அவருக்கு நான் மட்டுமல்ல இந்தத் திரையுலகமே துணை நிற்கும்.அவரின் இசையை தொடர்ந்துக் கொண்டாடுவோம்” என்று பார்த்திபன் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, சென்னை பனையூரில் அண்மையில் நடந்த ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியில் சரியான ஒருங்கிணைப்பு இல்லாததால் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கியவர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. இது சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையான நிலையில், ஏ.ஆர்.ரஹ்மான் இந்தச் சம்பவத்துக்கு பொறுப்பேற்று வருத்தம் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் திரையுலக பிரபலங்கள் பலரும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

4 mins ago

சினிமா

29 mins ago

சினிமா

35 mins ago

சினிமா

5 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்