சென்னை: ரஜினிகாந்த் நடிக்கும் 171வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருப்பதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
‘ஜெயிலர்’ படத்தைத் தொடர்ந்து ரஜினி நடிக்கும் 170-வது படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தை ‘ஜெய் பீம்’ படத்தை இயக்கிய த.செ.ஞானவேல் இயக்கவுள்ளார். அனிருத் இசையமைக்கிறார். இப்படம் அடுத்த ஆண்டு (2024) வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ரஜினி நடிக்கும் 171வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அன்பறிவு ஸ்டண்ட் இயக்குநர்களாக பணியாற்றுகின்றனர். இதனை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தனது எக்ஸ் தள பக்கத்தில் அறிவித்துள்ளது. கடந்த சில மாதங்களாகவே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பதாக தகவல் வெளியாகிவந்த நிலையில் தற்போது இது உறுதியாகியுள்ளது.
தற்போது விஜய் நடிப்பில் ‘லியோ’ படத்தை லோகேஷ் இயக்கி முடித்துள்ளார். வரும் அக்டோபர் 19ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்துக்குப் பிறகு ரஜினி படத்துக்கான முதற்கட்ட பணிகள் தொடங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago