சென்னை: இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா 2015ம் ஆண்டு ‘இசை’ என்ற படத்தைத் தயாரித்து, இயக்கி, நடித்திருந்தார். இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இப்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். விஷாலுடன் அவர் நடித்துள்ள ‘மார்க் ஆண்டனி’ வரும் 15ம் தேதி வெளியாகிறது. அடுத்து ஷங்கர் இயக்கும் ‘இந்தியன் 2’, ராம் சரண் நடிக்கும் ‘கேம் சேஞ்சர்’, கார்த்திக் சுப்புராஜின், ‘ஜிகர்தண்டா 2’ படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் அவர் ‘கில்லர்’ என்ற படத்தின் மூலம் மீண்டும் இயக்குநர் ஆக இருப்பதாகக் கூறியிருந்தார். அந்தக் கதையில் கார் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதால், வெளிநாட்டில் இருந்து புதிய கார் ஒன்றையும் அவர் இறக்குமதி செய்திருந்தார். பான் இந்தியா முறையில் உருவாகும் இதன் படப்பிடிப்பை ஆகஸ்ட் மாதம் தொடங்குவதாக எஸ்.ஜே.சூர்யா தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் இதுபற்றி அவரிடம் கேட்டபோது, “இப்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருவதால், அந்தப் படத்தைத் தொடங்குவது தள்ளிப் போய்விட்டது. ஜனவரி மாதம் தொடங்கத் திட்டம் இருக்கிறது” என்றார்.
முக்கிய செய்திகள்
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago