நடிகர்கள் பட்டாளத்துடன் களம் காணும் அக்‌ஷய் குமார் - பிறந்தநாளில் ‘வெல்கம் 3’ பட அறிவிப்பு

By செய்திப்பிரிவு

மும்பை: நடிகர் அக்‌ஷய் குமாரின் பிறந்தநாளையொட்டி அவரது நடிப்பில் ‘வெல்கம் 3’ படத்தின் அறிவிப்பு வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. சஞ்சய் தத், சுனில் ஷெட்டி, பரேஷ் ராவல், ராஜ்பால் யாதவ், மில்கா சிங், முகேஷ் திவாரி, யஷ்பால் ஷர்மா, ரவீனா டன் டன், ஜாக்லீன் பெர்னான்டஸ், திஷா படானி என பாலிவுட் நடிகர் பட்டாளத்தின் சங்கமத்தில் உருவாகிறது அக்‌ஷய் குமாரின் ‘வெல்கம் 3’. படத்தை அகமது கான் இயக்குகிறார். தனது 56-ஆவது பிறந்தநாளையொட்டி ரசிகர்களுக்கு கிஃப்ட் ஒன்றை கொடுப்பதாக குறிப்பிட்டு, இந்தப் படத்தின் அறிவிப்பு வீடியோவை தனது சமூக வலைதள பக்கங்களில் அக்‌ஷய் பகிர்ந்துள்ளார்.

இது ஒரு ‘வெல்கம்’ பட சீரிஸ். முன்னதாக கடந்த 2007-ம் ஆண்டு அக்‌ஷய் குமார், அனில்கபூர் நடிப்பில் வெளியான ‘வெல்கம்’ ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இதையடுத்து 2015-ம் ஆண்டு இதன் தொடர்ச்சியாக ‘வெல்கம் பேக்’ வெளியானது. இதில் நானா படேகர், ஸ்ருதி ஹாசன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அனீஸ் பாஸ்மி தான் இந்த இரண்டு படங்களையும் இயக்கியிருந்தார்.

தற்போது இதன் மூன்றாவது பாகத்துக்கு ‘வெல்கம் டூ தி ஜங்கிள்’ என பெயரிடப்பட்டுள்ளது. படக்குழு வெளியிட்டுள்ள வீடியோவைப் பொறுத்தவரை காட்டுக்குள் அனைத்து நடிகர்களும் நின்றுகொண்டு பாடலைப் பாடியபடி ஜாலியாக பேசிக்கொண்டிருக்கிறார்கள். படம் டிசம்பர் 20-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. வீடியோ:

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்