சென்னை: ரஜினியின் ‘ஜெயிலர்’ திரைப்படம் குறித்து காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் எக்ஸ் தளத்தில் மறைமுகமான கிண்டல் செய்துள்ளதாக ரஜினி ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘ஜெயிலர்’ திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. தமன்னா, ரம்யாகிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் உலக அளவில் ரூ.600 கோடி வசூலித்தது. இப்படத்தின் வெற்றியை முன்னிட்டு நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் நெல்சன், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கு படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் உயர் ரக சொகுசு கார்களை பரிசாக வழங்கினார்.
இந்த நிலையில், அண்மையில் இப்படம் ஓடிடியிலும் வெளியானது. பலரும் இந்த படத்தைப் பார்த்து கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று (செப்.08) காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில் மறைமுகமாக ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், “நேற்று இரவு ஒரு தமிழ் திரைப்படம் பார்த்தேன். அந்த திரைப்படம் பார்த்ததற்கு படத்தின் தயாரிப்பாளர் எனக்கு ஒரு சொகுசு காரை பரிசாக அளித்திருக்க வேண்டும்” என்று கிண்டலாக பதிவிட்டுள்ளார். இதனையடுத்து ரஜினி ரசிகர்கள் பலரும் அவர் ‘ஜெயிலர்’ திரைப்படத்தைத்தான் சொல்கிறார் என்று கூறி அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
36 mins ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago