இயக்குநர் ஹெச்.வினோத்தின் படத்துக்கு நடிகர் கமல்ஹாசன் தயாராகி வரும் வீடியோவை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதன் மூலம் விரைவில் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு நிறைவடையும் என தெரிகிறது.
நீண்ட இடைவெளிக்குப் பின் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி ஹிட்டடித்த திரைப்படம் ‘விக்ரம்’. இந்தப் படத்தைத் தொடர்ந்து கமல்ஹாசன் நடிப்பில் அடுத்து ‘இந்தியன் 2’ படம் வெளியாக உள்ளது. இதற்கிடையில் பிரபாஸ் நடிக்கும் ‘Kalki 2898 AD’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் கமல். அடுத்து ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிக்கும் கமல்ஹாசன் அந்தப் படத்தை தனது ராஜ்கமல் பிலிம்ஸ் மூலம் தயாரிக்கவும் இருக்கிறார். இன்னும் தலைப்பிடப்படாத இப்படம் ‘KH233’ என அழைக்கப்படுகிறது.
இந்நிலையில், கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் எக்ஸ் (ட்விட்டர்) தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. ‘ட்ரெய்னிங் பிகின்ஸ்’ என்ற தலைப்புடன் தொடங்கும் அந்த வீடியோவில் கமல் துப்பாக்கி பயிற்சி எடுக்கிறார். தோட்டாக்கள் தெறிக்கும் ஸ்லோமோஷன் வீடியோவின் இறுதியில் ‘KH233 ரைஸ் டூ ரூல்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் ஹெச்.வினோத் படத்துக்கான பயிற்சியில் நடிகர் கமல் ஈடுபட்டிருப்பதையும், விரைவில் ‘இந்தியன் 2’ பட ஷூட்டிங்கை முடித்துவிட்டு இந்தப் படத்துக்கு கமல் திரும்புவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
அஜித்தின் ‘துணிவு’ படத்துக்குப் பிறகு இயக்குநர் ஹெச்.வினோத் கமல்ஹாசனை இயகுக்கிறார். அரசியல் மையப்படுத்திய கதையாக இது இருக்கும் என கூறப்படுகிறது. இந்தப் படங்களைத் தொடர்ந்து கமல் - மணிரத்னம் கூட்டணியில் படம் உருவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
» ஏழைப் புற்றுநோயாளிகள் சிகிச்சைக்கு ரூ.60 லட்சம் வழங்கிய காவேரி கலாநிதி
» “உதயநிதியின் பேச்சாலும் துணிச்சலாலும் பெருமை கொள்கிறேன்” - நடிகர் சத்யராஜ்
முக்கிய செய்திகள்
சினிமா
19 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
7 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
22 hours ago