“அரசியலுக்குள் போக விரும்பவில்லை” - 'பாரத்' குறித்து நடிகர் வடிவேலு

By என். சன்னாசி

மதுரை: “இந்தியா என்ற பெயரை பாரத் என்று மாற்றினால் ஆதரவு கொடுப்பீர்களா என்ற கேள்விக்கு “நான் என்ன அந்த அரசியலிலே போகவில்லை.அப்படி போகும்போது சொல்கிறேன்” என நடிகர் வடிவேலு பேசியுள்ளார்.

நடிகர் வடிவேலு சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார். அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சந்திரமுகி முதல் பாகத்தில் ரஜினி நடித்திருந்தார். இப்போது இரண்டாம் பாகத்தில் ராகவா லாரன்ஸ் நடித்திருக்கிறார். ரொம்பவும் சுவாரஸ்யமாக வந்திருக்கிறது. நான் அதை முருகேசன் என்னும் கதாபாத்திரத்தில் தான் நடித்திருக்கிறேன். படம் நன்றாக வந்திருக்கிறது.

நீங்கள் பாருங்கள் பார்த்துவிட்டு சொல்லுங்கள். இரண்டு பேருடன் நடித்தது நன்றாக இருந்தது. இவ்வளவு நாள் காமெடி படங்களில் நடித்துள்ளேன். மாமன்னன் மூலம் இதையும் செய்ய முடியும் என்று மாபெரும் படத்தில் நிரூபித்து இருக்கிறோம். வழக்கம்போல் எப்போதும் காமெடி ஸ்டைலில் சந்திரமுகி திகில் கலந்த காமெடிஸ்டைல் முருகேசன் அந்த கேரக்டர் பேயிடம் மாட்டிக் கொண்டு எவ்வளவு பாடுபடுகிறான் அந்த படத்திலும் பார்த்திருப்பீர்கள்” என்றார். இந்தியா என்ற பெயரை பாரத் என்று மாற்றினால் ஆதரவு கொடுப்பீர்களா என்ற கேள்விக்கு “நான் என்ன அந்த அரசியலிலே போகவில்லை.அப்படி போகும்போது சொல்கிறேன்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE