‘ஜவான்’ முதல் ‘தி நன் 2’ வரை - வியாழக்கிழமை 4 படங்கள் ரிலீஸ்

By செய்திப்பிரிவு

செப்டம்பர் 7-ம் தேதியான நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ள படங்கள் குறித்து பார்ப்போம். ஜவான்: அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள படம் ‘ஜவான்’. இந்தப்படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தவிர, தீபிகா படுகோனே, நயனதாரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. ரூ.300 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படம் முதல் நாளில் ரூ.100 கோடி வசூலை குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி: 2020-ஆம் ஆண்டு வெளியான ‘நிசப்தம்’ படத்துக்குப் பிறகு அனுஷ்கா எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவரது நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’. இந்தப்படத்தில் ‘ஏஜென்ட் சாய் ஸ்ரீநிவாஸ்’ படம் மூலம் கவனம் பெற்ற நவீன் பொலிஷெட்டி நடித்துள்ளார். மகேஷ் பாபு.பி படத்தை இயக்கியுள்ளார். இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் நாளை வெளியாகிறது.

தமிழ்க்குடிமகன்: இசக்கி கார்வண்ணன் இயக்கி தயாரித்துள்ள படம் ‘தமிழ்க்குடிமகன்’. இவர், ‘பெட்டிக்கடை’, ‘பகிரி’ படங்களை இயக்கியவர். சாம் சி.எஸ். இசை மைத்துள்ள இந்தப் படத்துக்கு ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இதில் சேரன் நாயகனாக நடித்துள்ளார். ஸ்ரீபிரியங்கா, துருவா, வேல ராமமூர்த்தி, லால், அருள்தாஸ் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் நாளை வெளியாகிறது.

தி நன் 2: ‘நன்’ ஹாலிவுட் படத்தின் முதல் பாகம் கடந்த 2008-ம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. 2013-ல் ‘தி கான்ஜுரிங்’, 2016-ல் ‘தி கான்ஜுரிங் 2’, 2021-ல் ‘தி கன்ஜூரிங்: தி டெவில் மேட் மீ டூ இட்’ என இதன் அடுத்தடுத்த பாகங்கள் வெளியாகின. இந்நிலையில் தற்போது இதன் தொடர்ச்சியாக ‘தி நன் 2’ படம் நாளை வெளியாகிறது. டைசா ஃபார்மிகா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இபடத்தை மைக்கேல் சாவ்ஸ் இயக்கியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

19 mins ago

சினிமா

12 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்