மும்பை: ‘ஜவான்’ படக்குழுவுக்கு நடிகர் மகேஷ் பாபு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதற்கு பதிலளித்துள்ள ஷாருக்கான், மகேஷ் பாபுவுடன் சேர்ந்து படம் பார்க்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள படம், ‘ஜவான்’. நயன்தாரா, விஜய் சேதுபதி உட்பட பலர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் நாளை (செப்.7) வெளியாகிறது. அண்மையில் சென்னையில் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது. ட்ரெய்லரும் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில், இப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு படக்குழுவுக்கு தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், “இது ஜவானுக்கான நேரம். ஷாருக்கானின் கொண்டாட்டமும் ஆற்றலும் எங்கும் காணப்படுகின்றன. எல்லா சந்தையிலும் படம் ப்ளாக்பஸ்டர் ஆக வாழ்த்துகிறேன். குடும்பத்துடன் படத்தை பார்க்க காத்திருக்கிறேன்” என்று மகேஷ் பாபு பதிவிட்டுள்ளார்.
மகேஷ் பாபுவின் இந்த பதிவுக்கு பதிலளித்துள்ள ஷாருக்கான், “மிக்க நன்றி நண்பா. படத்தை நீங்கள் ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன். எப்போது பார்க்கிறீர்கள் என்பதை எனக்கு தெரியப்படுத்துங்கள். நானும் வந்து உங்களோடு சேர்ந்து பார்க்கிறேன். உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் என்னுடைய அன்பு” என்று தெரிவித்துள்ளார்.
» மாரடைப்பால் இறந்ததாக வதந்தி- நலமுடன் இருப்பதாக நடிகை ரம்யா தகவல்
» “நாம் பாரதீயர்கள், இந்தியர்கள் அல்ல” - கங்கனா ரனாவத் பகிர்வு
முக்கிய செய்திகள்
சினிமா
45 mins ago
சினிமா
2 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago