லக்ஷ்மி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் இசக்கி கார்வண்ணன் இயக்கி தயாரித்துள்ள படம், ‘தமிழ்க்குடிமகன்’. இவர், ‘பெட்டிக்கடை’, ‘பகிரி’ படங்களை இயக்கியவர். சாம் சி.எஸ். இசை மைத்துள்ள இந்தப் படத்துக்கு ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இதில் சேரன் நாயகனாக நடித்துள்ளார். ஸ்ரீபிரியங்கா, துருவா, வேல ராமமூர்த்தி, லால், அருள்தாஸ் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் நாளை வெளியாகிறது.
படம் பற்றி இயக்குநர் இசக்கி கார்வண்ணன் கூறும்போது, “உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம். இதுதான் ஒரு மனிதனின் அத்தியாவசிய தேவை. இதற்குள் சாதி எப்படி வந்தது? என்ற கேள்வி என்னுள் எழுந்தது. என்னைப் போல் பலருக்கும் எழுந்திருக்கும். அதுதான் இந்தப் படமாக உருவாகி இருக்கிறது. ‘நாதியத்த எங்களை சாதியற்றவங்களா ஆக்குங்க’ என்று படத்தில் ஒரு வசனம் வரும். அதுதான் இந்தப் படத்தின் மையம். சாதி பிரச்சினைக்குப் படத்தில் ஒரு தீர்வையும் சொல்லி இருக்கிறோம். இதில் சேரன், சின்னச்சாமி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அந்த கேரக்டருக்கு அவர்தான் பொருத்தமானவர் என்பதால் அவரை தேர்வு செய்தோம். லால், அருள்தாஸ், வேல ராமமூர்த்தி, மு.ராமசாமி, ஸ்ரீபிரியங்கா உட்பட அனைவருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள்” என்றார்
முக்கிய செய்திகள்
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago