கொச்சி: பிரபல மலையாள நடிகர் டோவினோ தாமஸ். இவர் தமிழில், தனுஷ் நடித்த ’மாரி 2’ படத்தில் நடித்துள்ளார். இவர் நடித்த ‘மின்னல் முரளி’, ’2018’ ஆகிய படங்கள் தமிழிலும் வரவேற்பைப் பெற்றன. ’2018’ திரைப்படம் கேரளாவில் வசூலில் சாதனைப் படைத்தது. இவர் இப்போது ’நடிகர் திலகம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். பிருத்விராஜ், சுராஜ் வெஞ்சரமூடு நடிப்பில் வெற்றி பெற்ற ‘டிரைவிங் லைசென்ஸ்’ படத்தை இயக்கிய லால் ஜூனியர் இதை இயக்குகிறார். இந்தப் படத்தில் ஷைன் டாம் சாக்கோ, சவுபின் ஷாகிர், பாவனா, இந்திரன்ஸ் உட்பட பலர் நடிக்கின்றனர்.
இதன் படப்பிடிப்பு பெரும்பாவூர் அருகில் உள்ள மாரம்பள்ளியில் நடந்து வந்தது. டோவினோ தாமஸ் நடிக்கும் காட்சி படமாகிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக நடந்த விபத்தில் அவருக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து படப்பிடிப்பு உடனடியாக நிறுத்தப்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட டோவினோவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் இரண்டு வாரங்களுக்கு ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இதனால் படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தெலுங்கு படத் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. இதன் மூலம் இந்நிறுவனம் மலையாளத்தில் அடியெடுத்து வைக்கிறது
முக்கிய செய்திகள்
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago