‘பரிதாபங்கள்’ யூடியூப் சேனல் மூலமாக பிரபலமான கோபி மற்றும் சுதாகர் இணைந்து தயாரித்து நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
‘மெட்ராஸ் சென்ட்ரல்’ என்ற யூடியூப் சேனலின் வழியே சமகால அரசியல் நிகழ்வுகளை பகடி செய்து பிரபலமடைந்தவர்கள் கோபி மற்றும் சுதாகர். பின்னர் அந்த யூடியூப் சேனலிலிருந்து வெளியேறி ‘பரிதாபங்கள்’ என்ற பெயரில் தனியாக யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து பல்வேறு விஷயங்களை நகைச்சுவையுடன் வீடியோக்களாக வெளியிட்டு பரவலான ரசிகர்கள் கூட்டத்தை பெற்றுள்ளனர். தற்போது இந்த யூடியூப் சேனலை 4.88 மில்லியனுக்கு அதிகமான பார்வையாளர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர்.
சினிமாவை லட்சியமாக கொண்ட இருவரும் இணைந்து க்ரவுட் பண்டிங் முறையில் படம் ஒன்றை தயாரித்து வெளியிட திட்டமிட்டனர். இதற்காக ஃபண்ட்மெலன் செயலி மூலம் நிதி திரட்டினர். இதன்மூலம் பரிதாபங்கள் யூடியூப் சேனலுக்கு 6.5 கோடி ரூபாய் நிதி திரட்டப்பட்டதாக கூறப்பட்டது. பொது மக்களிடம் நிதி கிடைத்ததை அடுத்து, ‘ஹே மணி கம் டுடே, கோ டுமாரோ’ என்ற தலைப்பில் உருவாகும் படத்தின் டைட்டில் லுக் போஸ்டரையும் வெளியிட்டிருந்தனர். கரோனா ஊரடங்கு காரணமாக தாங்கள் தயாரிக்கும் படம் தாமதமாவதாகவும், விரைவில் இந்தப் படத்தை தொடங்குவோம் என இருவரும் தெரிவித்திருந்தனர்.
அந்தப் படத்தை கைவிட்டவர்கள் புதிய படம் ஒன்றை தயாரித்து முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் பணிகள் இந்தாண்டு ஜனவரியில் தொடங்கியது. தற்போது படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இது தொடர்பான வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் விஷ்ணு விஜயன் இயக்குகிறார். விடிவி கணேஷ், ரமேஷ் கண்ணா, சுரேஷ் சக்ரவர்த்தி, விஜி சந்திரசேகர், சுபத்ரா ராபர்ட், முருகானந்தம் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
» “உதயநிதியின் கருத்துக்கு துணை நிற்கிறேன்” - இயக்குநர் பா.ரஞ்சித்
» ‘கருமேகங்கள் கலைகின்றன’ படத்தைப் பார்த்து பாராட்டிய அன்புமணி
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago