திருப்பதி: திருப்பதி ஏழுமலையானை தனது மகள் சுஹானா கானுடன் தரிசித்தார் நடிகர் ஷாருக்கான். அவருடன் நடிகை நயன்தாராவும் சாமி தரிசனம் செய்தார். வரும் வியாழக்கிழமை (செப். 7) ஜவான் படம் வெளியாக உள்ள நிலையில் அதில் நாயகன் மற்றும் நாயகியாக நடித்துள்ள ஷாருக் மற்றும் நயன்தாரா திருப்பதி வந்திருந்தனர்.
அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள படம், ‘ஜவான்’. நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோனே உட்பட பலர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகிறது. இப்படத்தின் ப்ரிவ்யூ கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் ‘ஜவான்’ படத்தின் ட்ரெய்லரை அண்மையில் படக்குழு வெளியிட்டது.
இயக்குநர் அட்லீயின் வழக்கமான கமர்ஷியல் ஜானரில் இந்தப் படம் உருவாகி உள்ளது. சுமார் 2.46 நிமிடங்கள் ரன் டைம் கொண்ட ட்ரெய்லரின் ஒவ்வொரு ஃபிரேமையும் அட்லீ பார்த்து பார்த்து செதுக்கி உள்ளார். இந்தப் படம் ஷாருக்கான் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஜனவரியில் ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்த பதான் திரைப்படம் பாக்ஸ் ஆஃபிஸில் வசூலை அள்ளியது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
18 mins ago
சினிமா
42 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago