விஜய் தேவரகொண்டாவுடன் சமந்தா நடித்துள்ள ’குஷி’ திரைப்படம் கடந்த 1-ம் தேதி வெளியானது. இந்தப் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்தப் படத்தின் புரமோஷனுக்காக விஜய் தேவரகொண்டா கலந்துகொண்டார்.
நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் நாகர்ஜுனா தனது முன்னாள் மருமகள் சமந்தா பற்றி அவரிடம் விசாரித்தார். விஜய் தேவரகொண்டாவிடம் சமந்தா வரவில்லையா? என்று கேட்டு நாகர்ஜுனா நலம் விசாரித்தார்.
நாகர்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்துத் திருமணம் செய்துகொண்ட சமந்தா, 4 வருடங்களுக்குப் பின் கடந்த ஆண்டு விவாகரத்து செய்தார்.
இந்தியா திரும்பினார் சமந்தா: தசை அழற்சி காரணமாக நடிப்பில் இருந்து ஓய்வெடுத்துள்ள நடிகை சமந்தா கடந்த மாதம் அமெரிக்கா சென்றார்.
சிகிச்சைக்காக அவர் அங்கு சென்றதாகக் கூறப்பட்டது. அங்கு, நியூயார்க் நகரில் நடந்த 42-வது இந்திய தின விழாவில் கலந்துகொண்டார். கலிபோர்னியா உட்பட பல்வேறு பகுதிகளுக்குச் சென்ற அவர் அந்தப் புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் அவர் ஞாயிற்றுக்கிழமை இரவு இந்தியா திரும்பினார்.
முக்கிய செய்திகள்
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago