ஹைதராபாத்: விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் ‘குஷி’ திரைப்படம் 3 நாட்களில் உலக அளவில் ரூ.70 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
ஷிவா நிர்வானா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, சமந்தா நடித்துள்ள படம் ‘குஷி’. தெலுங்கில் உருவான இப்படம் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. சரண்யா பொன்வண்ணன், லக்ஷ்மி, ரோஹினி, வெண்ணிலா கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு ஹிஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார். படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
கடந்த செப்டம்பர் 1-ம் தேதி வெளியான ‘குஷி’ ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. ரொமான்டிக் - காமெடி ஜானரைக் கொண்ட ரசிகர்களிடையே பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த எதிர்பார்ப்பு கைகொடுக்கவில்லை என விமர்சகர்கள் கருத்து தெரிவித்தனர். எனினும், திரையரங்குகளில் குறிப்பிடத்தக்க வரவேற்பு கிடைத்துள்ளது. ரூ.50 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இப்படம் வெளியான 3 நாட்களில் உலக அளவில் ரூ.70.23 கோடி வசூலை குவித்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. | >விமர்சனத்தை வாசிக்க: குஷி Review: ஒர்க் அவுட் ஆன கெமிஸ்ட்ரி... ஆனால், ‘பாஸ்’ ஆனதா?
#Kushi scoring big at the BoxOffice, 70.23 cr+ gross worldwide in 3 days
Viplav & Aradhya are now household names for all the families
Book your tickets now!
- https://t.co/16jRp6UqHu#BlockbusterKushi
முக்கிய செய்திகள்
சினிமா
10 mins ago
சினிமா
14 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago