விஷாலின் ‘மார்க் ஆண்டனி’ ட்ரெய்லர் செப்.3 ரிலீஸ்

By செய்திப்பிரிவு

சென்னை: விஷால், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘மார்க் ஆண்டனி’ படத்தின் ட்ரெய்லர் நாளை வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

‘த்ரிஷா இல்லன்னா நயன்தாரா’, ‘அன்பானவன், அசராதவன், அடங்காதவன்’, ‘பகீரா’ படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிக்கும் படம் ‘மார்க் ஆண்டனி’. படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுனீல், செல்வராகவன், ரிது வர்மா, அபிநயா, கிங்ஸ்லி, ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ள இப்படத்தை மினி ஸ்டூடியோ நிறுவனம் தயாரித்துள்ளது. அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் இரண்டு பாடல்களை படக்குழு இதுவரை வெளியிட்டுள்ளது.

டைம் டிராவலை அடிப்படையாகக் கொண்ட இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், இப்படத்தின் ட்ரெய்லர் நாளை (செப்டம்பர் 3) வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இப்படம் வரும் செப்.15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE