‘த யங் கார்ல் மார்க்ஸ்’ – புரட்சிகர நட்பின் இளமை பருவம்

By சா.ஜெ.முகில் தங்கம்

கார்ல் மார்க்ஸ் என்றால் உடனே நினைவுக்கு வருவது அவரது வெண்தாடியும் புன்சிரிப்பு கூட இல்லாமல் இறுக்கமாக இருக்கும் அவரது கருப்பு வெள்ளை புகைப்படம்தான். அதன்பிறகுதான் அவரது எழுத்துக்களும் கொள்கைகளும் . உலகிற்கே மிக முக்கியமான கொள்கைகளை சொன்ன கார் மார்க்ஸின் இளமை பருவம் எப்படி இருந்திருக்கும் என த யங் கார்ல் மார்க்ஸ் திரைப்படத்தின் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது.

சில கற்பனைகளும் பல உண்மை நிகழ்வுகளுமாய் திரைப்படத்தின் கதையை எழுதியுள்ளனர். மார்க்ஸிற்கும் ஏங்கல்ஸிற்கும் உண்டாகும் நட்பில் ஆரம்பித்து கிபி1848ல் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை இருவரும் இணைந்து எழுதி முடிப்பது வரை நடந்த நிகழ்வுகளை சுவாரசியமாக காட்சிப்படுத்தியுள்ளார் இயக்குநர் . மார்க்ஸைப் பற்றி வெறும் வாய் வார்த்தைகளில் அல்லது எழுத்துக்களில் மட்டும் படித்த விசயங்களை திரையில் பார்ப்பது என்பது அருமையான திரை அனுபவம். மார்க்ஸிற்கும் ஏங்கல்ஸிற்கும் நட்பு உருவாகும் தருணத்தை காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அருமை. ஒவ்வொருவரிடமும் மார்க்ஸிம் ஏங்கெல்ஸிம் ஒருவரையொருவர் அறிமுகம் செய்யும்பொழுது இருக்கும் பெருமிதம் அவர்களது நட்பை நாமும் கொண்டாட செய்கிரது. உலகம் வியந்த புரட்சிகர நட்பை திரையிலும் அதே உணர்வோடு கடத்தியுள்ளனர்.

ஒருங்கிணைந்த பிரஷ்யாவிலிருந்து மார்க்ஸ் நாடு கடத்தப்படுவது, தலைமறைவு வாழ்க்கை, ஏங்கெல்ஸின் குடும்ப பிண்ணனி, மார்க்ஸ் – ஜென்னி தம்பதியினரிடையே இருக்கும் அளவற்ற அன்பு, ஏங்கெல்ஸின் காதல் என இருவரின் இளமை பருவத்தின் நிகழ்வுகளை அருமையாக கோர்த்துள்ள்னர். ஏங்கெல்சைத் தவிர வேறு யாரும் மார்க்ஸின் கொள்கைகளை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனாலும் மார்க்ஸ் யாருக்கும் வளைந்துகொடுக்காமல் தான் சொல்லும் கருத்தில் உறுதியாக இருக்கிறார்.

முக்கியமாக பாரிஸ் புரட்சிக்கு முன்பு உருவான உழைப்பாளர்களின் அமைப்பின் தலைவர்களிடையே பேசும்பொழுது அனைத்து உழைக்கும் மக்களுக்காகவும் ஒரு கொள்கையை உருவாக்க வேண்டும். வெறுமென இங்கிருந்தே பேசும் புர்ஷ்வாத்தனத்தை விட்டு அம்மக்களின் உண்மையான உணர்வுகளையும் உரிமைகளையும் தெரிந்துகொண்டு அதற்கேற்ப இயங்க வேண்டும் என்கிறார். இதனை அனைத்து நாடுகளுக்கும் எடுத்து செல்ல வேண்டும் எனபதே அவர்களது ஆசையாக இருந்தது. அதே நேரத்தில் மூத்த தலைவர்களிடம் பேசும்போது நிதானமாக பேசுவதையும் மார்க்ஸ் மறக்கவில்லை. அவர்களுக்கான மரியாதையை துளியும் குறைக்காமல் மார்க்ஸின் சொல்லாடல்களின் காட்சிக்கான வீரியத்தை அதிகரித்திருக்கிறார்கள். இப்போதும் புர்ஷ்வா என்பதை குறித்து பேசியிக்கொண்டிருக்கும் சூழ்நிலையில் அன்றே உழைக்கும் மக்களின் நிலையில் நின்று பேசியிருக்கிறார் மார்க்ஸ்.

நிறைய புத்தகங்களிலும் மேடைப்பேச்சுகளிலும் கேட்ட மார்க்ஸின் வறுமை பக்கங்களை சில இடங்களில் மட்டும் குறிப்பிட்டு பெரிதாக காட்சிப்படுத்தாமல் கடந்துபோனது அருமை. மார்க்ஸிம் ஏங்கெல்ஸிம் தொடர்ந்து பேசும்போதெல்லாம் புரட்சி குறித்த பேச்சுக்களே மிகுந்து இருக்கிறது. மார்க்ஸின் மனைவியான ஜென்னியையும் ஏங்கெல்ஸின் காதலி மேரியையும் முடிந்த அளவிற்கு மையகதைக்குள் இணைத்துள்ளனர். உழைக்கும் மக்கள் குறித்தும் வறுமை குறித்தும் எல்லோருக்கும் சமமாக வாதிடுகின்றனர். சந்தைமயமாவதை, பொருள்மயமாவதை பயங்கரமாக எதிர்த்தாலும் தன் வாழ்க்கைக்கும் பனம் தேவைப்படுகிரது என உணரும் இட்த்தில் மார்க்ஸின் அடுத்த கருத்துருவாக்கம் ஆரம்பிக்கிறது.

இறுதியாக ஏங்கெல்ஸ் பேசும் காட்சியும் அதன் பின் கம்யூனிசம் எனும் வார்த்தையை முதன்முதலாய் உச்சரிப்பதும் என கம்யூனிஸ்ட்கள் மட்டுமின்றி எல்லோருக்கும் னெகிழ்வை ஏற்படுத்தும் தருணம் அது. அதன் பின் வரும் காட்சிகள் மார்க்ஸின் சுயமாரியாதைக்கு ஒரு சான்று. வரலாற்றில் நாம் கேள்விப்பட்ட கதாபாத்திரங்கள் எல்லாம் இளமையாக இருந்தபோதும் அவர்களது பார்வை முதிர்ச்சியின் வெளிப்பாடாகவே அமைகிறது. படம் முழுக்க மார்க்ஸ் ஆக்கிரமித்து இருந்தாலும் ஏங்கெல்ஸை மறந்து மார்க்ஸை நினைக்க முடியாது என்பதை அவர் வரும் காட்சிகள் அழுத்தமாக சொல்கின்றன.

முந்தைய தலைமுறையின் மிக முக்கியமான ஆளுமையை அடுத்த தலைமுறைக்கு மிகவும் புத்துணர்ச்சியோடு இளமையாக அறிமுகம் செய்து மார்க்ஸ் குறித்தான வாசிப்பை தூண்டுகிறது. த யங் கார்ல் மார்க்ஸ். இறுதியில் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை எழுதி முடிக்கும்பொழுது அதனை படிக்க வேண்டும் என்ற ஆர்வம் மேலெழும்புகிறது. கம்யூனிஸ்ட்களுக்கு என குறுக்காமல் மார்க்ஸை அறிந்துகொள்ள நினைக்கும் அனைவருக்கும் இந்த திரைப்படம் மிக உதவியாக இருக்கும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

23 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்