கேரளா: நடிகர் ஃபஹத் ஃபாசில் ‘லேண்ட் ரோவர் டிஃபென்டர் 90 வி8’ (Land Rover Defender 90 V8) என்ற சொகுசு காரை வாங்கியுள்ளார். இதன் மூலம் கேரளாவில் இந்தக் காரை வாங்கிய முதல் நபர் என்ற பெருமையை ஃபஹத் ஃபாசில் பெற்றுள்ளார்.
அண்மையில் வந்த ‘மாமன்னன்’ படத்தில் தன் கதாபாத்திரத்தில் வெளுத்துகட்டினார் நடிகர் ஃபஹத் ஃபாசில். ஆனால் அவரின் நடிப்பில் ‘கேஜிஎஃப்’ படத்தை தயாரித்த ஹோம்பாலே ப்லிம்ஸ் தயாரிப்பில் வெளியான ‘தூமம்’ படம் ரசிகர்களிடையே போதிய வரவேற்பை பெறவில்லை. அடுத்தாக ‘புஷ்பா 2’, ‘ரோமாஞ்சம்’ படத்தை இயக்கிய ஜித்து மாதவனின் ‘ஆவேஷம்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் நடிக்கும் அவரின் கெட்டப் இணையத்தில் வைரலானது.
பொதுவாக நடிப்பைத் தாண்டி சொகுசு கார்களை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார் ஃபஹத் ஃபாசில். அவரது மனைவி நஸ்ரியாவும் உயர்தர கார்களை வாங்குவதில் கவனம் செலுத்துகிறார். அந்த வகையில் இந்த தம்பதியினர் ரூ.2.44 கோடி மதிப்புள்ள ‘லேண்ட் ரோவர் டிஃபென்டர் 90 வி8’ என்ற உயர் ரக சொகுசு காரை வாங்கியுள்ளனர்.
கேரளா ரெஜிஸ்டரேஷனில் பதிவு செய்யப்பட்ட முதல் கார் இது என்பதும் அதனை வாங்கிய முதல் நபர் ஃபஹத் ஃபாசில் என்பதும் குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago