மலையாள நடிகை அபர்ணா நாயர் மரணம்: போலீஸ் விசாரணை

By செய்திப்பிரிவு

மலையாள நடிகை அபர்ணா நாயர் தற்கொலை செய்துகொண்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருக்கு வயது 33. திருவனந்தபுரத்தில் உள்ள அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். மருத்துவர்கள் பரிசோதித்துவிட்டு அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

நடிகை அபர்ணா நாயர் மலையாள சீரியல் நடிகையாக அறிமுகமாகி வெள்ளித்திரையில் தடம் பதித்தவராவார். இவருக்கு சஞ்சித் என்ற கணவரும், இரண்டு மகள்களும் உள்ளனர்.

இவரது மரணம் தொடர்பாக போலீஸார் சந்தேக மரண வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். முதல்கட்ட தகவலின்படி அபர்ணா நாயர் குடும்பப் பிரச்சினை காரணமாக இந்த விபரீத முடிவை எடுத்ததாகத் தெரிகிறது.

நேற்று இரவு வீட்டில் அவர் தூக்கில் தொங்கியபடி இருந்ததாகவும், அவரை உடனடியாக குடும்பத்தினர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றதாகவும் அங்கிருந்து வந்த தகவலின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அபர்ணா நாயரின் மறைவு, கேரள திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

4 mins ago

சினிமா

10 mins ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

மேலும்