சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த ‘ஜெயிலர்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதாக படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்நிலையில், இதனை கொண்டாடும் விதமாக ரஜினிகாந்துக்கு BMW X7 காரை படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் அன்புப் பரிசாக வழங்கி உள்ளார்.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 10-ம் தேதி வெளிவந்த திரைப்படம் ‘ஜெயிலர்’. தமன்னா, ரம்யாகிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராஃப், யோகி பாபு, வசந்த் ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். பான் இந்தியா முறையில் வெளியாகி உள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. தற்போது திரை அரங்குகளில் வெற்றிகரமாக திரையிடப்பட்டு வருகிறது. இதுவரை இந்தப் படம் சுமார் 600 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில் படத்தின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக ரஜினிகாந்துக்கு BMW X7 காரை படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் பரிசளித்துள்ளார். இது சர்ப்ரைஸ் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. இதன் வீடியோவை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.
» ‘இணையும் பாரதம், வெல்லும் இண்டியா’ - எதிர்க்கட்சிக் கூட்டணியின் தேர்தல் முழக்கம்?
» iQOO Z7 புரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
21 hours ago