துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான ‘கிங் ஆஃப் கொத்தா’ திரைப்படம் எதிர்மறை விமர்சனங்களால் பாக்ஸ் ஆஃபிஸில் பின்னடைவை சந்தித்துள்ளது.
அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் உருவான படம் ‘கிங் ஆஃப் கொத்தா’. கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நாயகியாக நடித்திருந்தார். ஷபீர், செம்பன் வினோத், சாந்தி கிருஷ்ணா, அனிகா சுரேந்திரன் உட்பட பலர் நடித்துள்ளனர்.
இந்தப் படத்துக்கு நிமீஷ் ரவி ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தைத் துல்கர் சல்மானின் வேஃபர் பிலிம்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது. மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் வெளியான இப்படத்துக்கு ஜேக்ஸ் பிஜோய், ஷான் ரஹ்மான் இணைந்து இசையமைத்துள்ளனர்.
இந்நிலையில், படம் வெளியான முதல் நாளிலிருந்தே ‘கேஜிஎஃப்’ ரீமேக் போல் உள்ளதாகவும், திரைக்கதை அயற்சியை கூட்டுவதாகவும் எதிர்மறை விமர்சனங்கள் எழுந்தன. இதனால் ரூ.50 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இப்படம் வெளியாகி 7 நாட்கள் கடந்த நிலையில், உலக அளவில் இதுவரை ரூ.30 கோடி வசூலை மட்டுமே குவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பான் இந்தியா முறையில் வெளியாகியும், துல்கர் சல்மானாலும் படத்தின் பாக்ஸ் ஆஃபிஸ் எண்களை கூட்டமுடியவில்லை.
முக்கிய செய்திகள்
சினிமா
40 mins ago
சினிமா
15 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago