அண்ணா திரையரங்கம்: காலை 9.30 மணி
THE PRESIDENT / EL PRESI | DIR: GUSTAVO POSTIGLINE | ARGENTINA | 2017 | 70'
தேர்தலில் வென்ற ஜனாதிபதி அன்று இரவுக்கு முன் நகரத்தை காரில் வலம் வருகிறார். தனது முன்னாள் மனைவி, தனது காதலி, மற்றும் தனது மகளிடமிருந்து அசௌகரியத்தை ஏற்படுத்தும்விதமாக போன் அழைப்பு, இன்னும் பல சூழ்நிலைகளுக்கு நடுவில் தனது இமேஜ்ஜுக்கான ஆலோசகரை அன்று இரவு சந்திக்கிறார். இந்த கதாபாத்திரத்தின் நெருக்கத்தை நாம் கண்டறிகிற அதே வேளை, ஒரு ரகசியத்தையும் ஒரு குற்றத்தையும் மறைக்கும் இந்த கதாபாத்திரத்தின் விதியை மாற்றக்கூடியதாக அது இருக்கிறது. பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகளை வென்ற படம்.இப்படம் இன்று அண்ணா திரையரங்கில் காலை 9.30க்கு திரையிடப்படுகிறது.
அண்ணா திரையரங்கம்: பிற்பகல் 2.30 மணி
CLAIRE'S CAMERA / KEUL-LE-EO-UIKA-ME-LA | DIR: SANGSOO HONG | KOREAN / ENGLISH / FRENCH| 2017 | 69'
கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு ஒரு வணிக பயணத்தில் வருகிறார் மான்ஹீ எனும் இளம் பெண். அவர் நேர்மையற்றவர் என்று குற்றஞ்சாட்டப்பட்டு துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்படுகிறார். அதைப் பார்க்கும் ஆசிரியை கிளாரே வேகமாக அருகில் சென்று தனது போலெராய்டு கேமராவில் அச்சம்பவத்தை புகைப்படங்கள் எடுக்கிறார். அவர் மான்ஹீ என்பதை அறிந்து அவர்மீது பரிதாபப்படுகிறார். கிளாரே போன்ற இன்னொரு ஜோடிக் கண்களும் மான்ஹீ உயிரோடு இருந்ததையும் பின்னர் சுடப்பட்டு இறப்பதையும் கண்கூடாகப் பார்க்கிறார். புகைப்படங்கள் எடுப்பதன் மூலம் கிளாரே எப்பொருளையும் கூடுதல் கவனம் செலுத்தி பார்க்கும் திறன் பெறுகிறார். கூடவே அப்பொருள்களுக்குள் ஊடுருவிக் கடந்து செல்லும் பார்வையை உணர்கிறார். இப்பொழுது கிளாரே மான்ஹீ இருவரும் மான்ஹீ எங்கு சுட்டுக்கொல்லப்பட்டாரோ அதனருகே உள்ள கஃபேவுக்கு செல்கின்றனர். இப்போது நாம் கிளாரேவின் ஆற்றலைக் காண முன்னோக்கிச் செல்கிறோம்.
தேவிபாலா: காலை 11.15 மணி
MANJAN / MANJAN | DIR: RAHMAN SEYFI AZAD | PERSIAN | 2017 | 100'
மொலாட் மற்றும் ஹாஷெம் அவர்களின் நோயுற்ற மகனை வைத்திருக்க வேண்டும் என்பதில் வாதம் உருவாகிறது, மொலாட் அவர்களின் மகனை பலம் குன்றிய நுரையீரல் உடையோர் நலனுக்கான மருத்துவ இல்லத்துக்கு அனுப்பி வைப்பதற்கு ஹாஷெம் எதிர்க்கிறான். ஷாஹெம் அவளை விவாகரத்து செய்வதென முடிவெடுப்பதற்கு இயலாமல் குழந்தையை வைத்துக்கொள்ளச் சொல்லி
மொலாட் கடும் நெருக்கடியைத் தருகிறாள். ஹாஷெம் மறுமணம் புரிந்துகொள்ள விரும்பி இரண்டாவது மனைவியிடம் பேசுகிறான். ஆனால் அப்பெண்ணோ குழந்தையை பார்த்துக்கொள்ள முடியாது எனக் கூறுகிறாள். இதனால் மனநிலை உடைந்த ஹாஷெம் வேலையை விடும் நிலைக்குத் தள்ளப்படுகிறான்
தேவி தியேட்டர்: பிற்பகல் 2.00 மணி
BLOSSOMING INTO A FAMILY / MADOU: AFTER THE RAIN | DIR: HIROKI HAYASHI | JAPANESE | 2016 | 126'
''ஒரு இனிய குடும்பத்தின் அன்பை நான் எப்போதும் உணர்ந்ததில்லை.'' - லட்சியவாதியான ஈச்சிரோவால் ஒரு குழந்தையாக தத்தெடுக்கப்பட்ட சீஷிரோவின் 1948ன் ஆண்டுக் குறிப்பிலிருந்து காணப்படும் வாசகம் இது. 1980கள், இசுமி ஒரு வங்கியில் பணியாற்றுகிறாள். அவள் தனது தாய் இடோவுடன் வசிக்கிறாள். இருபத்திரண்டு ஆண்டுகள் கழித்து, இசுமி திருமணத்திற்கு முன்தினம், ஒரு குளிர்கால இரவு. இசுமியைப் பற்றி அவளின் மறைந்த தந்தை சீஷிரோவின் கனவைப் பற்றிச் சொல்கிறார். அவளின் தந்தையின் கனவு இசுமியின் திருமணம்தான் என்கிறார். அவ்வேளையில் அவளுடைய அன்பான தந்தையைப் பற்றி நினைத்துப் பார்க்கிறாள். இதற்கிடையில் என்ன நடந்தது? தலைகீழான காலவரிசை முறையில் இந்தப் படம் ஒருவரைப் பற்றிய கதையைக் கூறுகிறது. ஏராளமான திரைப்படவிழக்களில் இப்படம் பல்வேறு விருதுகளை வென்றுள்ளது.
ரஷ்ய கலாச்சார மையம்: பிற்பகல் 3.00 மணி
JUZE / JUJE | DIR: MIRANSHA NIK | KANNADA|2017 |
கர்நாடக மாநிலம், 1990களில் போரிமோல் கிராமம். ஜூஸே என்பவனின் வாழ்க்கை, இங்குள்ள குடிசைப்பகுதியில் வாழும் சந்தோஷின் வாழ்க்கையைச் சுற்றியே சுழல்கின்றன. குடிசைப்பகுதி உரிமையாளரிடம் வேலைசெய்யும் ஜுஸேவின் அதிகாரத்தின்கீழ் குடிசைப்பகுதி இயங்குகிறது. படத்தில் உள்ள ஒவ்வொரு கதாபாத்திரங்களும் ஜுஸை வெறுக்கின்றன, ஆனால் அவனிடமிருந்து அக்குடிசைப்பகுதி மக்கள் யாரும் தப்பிக்க முடியாது. அதனாலேயே அவநம்பிக்கையுடனும் அச்சத்துடனும் அவர்கள் வாழ்க்கிறார்கள். இந்த அச்சமே அவர்களை இருண்ட பாதையை நோக்கி வழிநடத்துகிறது. சந்தோஷ் ஒரு சிறந்த மாணவன். அவனுக்கு ஒரே நம்பிக்கைக்குரிய பள்ளித் தோழி மாணவி மாயா. ஜுஸேவின் அதிகாரத்திற்கு ஆட்டம் தரும் சில சம்பவங்களும் நடக்கின்றன..
தாகூர் திரைப்பட மையம்: மாலை 4.45 மணி
WILD | DIR: NICOLETTE KREBITZ | GERMAN | 2017 | 97'
தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றும் இளம் பெண் அனியா தனது துறையில் நிறைய பிரச்சனைகளை சந்திக்கிறாள். அவை யாவும் ஆண்கள் அவர்களின் பாலியல் சார்ந்த அதிகாரங்களாக இருக்கின்றன. இதனால் அவள் தனது வளர்ச்சியை இயல்பான முறையில் வளர்த்தெடுக்க இயலவில்லை. எதிர்பாராமல் பூங்காவில் ஒரு ஓநாயை சந்திக்கிறாள். அந்த ஓநாயுடன் அவளுக்கு ஒரு சினேகம் ஏற்படுகிறது. கடும் குளிர் படர்ந்த நாளில் ஓநாய் ஒன்றை சந்திப்பதால் அனியாவின் வாழ்க்கையே மாறுகிறது. அந்த ஓநாயின் மீதான இனம் புரியாத ஈடுபாடு அவளை சமூக நெறிகளை தாண்டி பல செயல்களை செய்ய வைக்கிறது. பொருளாசை பிடித்த உலகம், பாலியல் தேவைகளுக்கு ஆண்களை சார்ந்திருக்கும் பெண்கள், நகர வாழ்க்கையின் மந்த கதி என இந்த உலகின் பிடியிலிருந்து அவள் மீள நினைக்கிறாள்.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago