சென்னை: ‘ஜவான்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்காக நடிகர் ஷாருக்கான் சென்னைக்கு வருகை தந்துள்ளார். இந்த விழாவில் நடிகர் விஜய் கலந்துகொள்ளலாம் என கூறப்படுகிறது.
அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள படம், ‘ஜவான்’. நயன்தாரா, விஜய் சேதுபதி உட்பட பலர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் செப்.7-ம் தேதி வெளியாகிறது. படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றன. மும்பையில் ஒரு சில இடங்களில் இப்படத்துக்கான புக்கிங் திறக்கப்பட்ட 15 நிமிடங்களில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துவிட்டதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் தற்போது தொடங்கியுள்ளது. இதில் கலந்துகொள்வதற்காக நடிகர் ஷாருக்கான் சென்னை வந்துள்ளார். இந்த விழாவில் அட்லீ, நயன்தாரா, விஜய் சேதுபதி உள்ளிட்ட படக்குழுவினருடன் நடிகர் விஜய்யும் கலந்துகொள்வார் என கூறப்படுகிறது.
‘விஜய் 68’ படதுக்காக அமெரிக்கா சென்றுள்ள விஜய் அங்குள்ள விமான நிலையத்தில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின. அவர் ‘ஜவான்’ நிகழ்வில் கலந்துகொள்ள சென்னை புறப்படுவதற்காக விமான நிலையத்தில் இருந்த புகைப்படங்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
» ‘மையோசைடிஸ் இந்தியா’ தொண்டு நிறுவன விளம்பரத் தூதராக சமந்தா நியமனம்
» இனி எந்த தேர்தலிலும் யாருக்கும் ரஜினி ஆதரவு தரமாட்டார்: அண்ணன் சத்தியநாராயணா
பிரமாண்டமான முறையில் நடைபெறும் ‘ஜவான்’ இசை வெளியீட்டு விழாவில் ஷாருக்கானின் பேச்சை கேட்க ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். மேலும் நாளை (ஆகஸ்ட்31) துபாயின் மிக உயர்ந்த கட்டிடமான புர்ஜ் கலிஃபாபவில் ‘ஜவான்’ பட ட்ரெய்லர் வெளியாக உள்ளது குறிப்பிடத்தகத்து.
முக்கிய செய்திகள்
சினிமா
7 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago