நடிகர் ஜோஜு ஜார்ஜிடம் ரூ.15 லட்சம் திருட்டு- பாஸ்போர்ட் மாயம்

By செய்திப்பிரிவு

லண்டன்: பிரபல மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ். இவர் தமிழில், தனுஷின் ‘ஜகமே தந்திரம்’, ‘பஃபூன்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் இப்போது ‘அண்டோனி’ என்ற மலையாளப் படத்தில் நடித்துள்ளார். இதில் கல்யாணி பிரியதர்ஷன், செம்பன் வினோத், நைலா உஷா உட்பட பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் புரமோஷனுக்காக படக்குழுவினர், தயாரிப்பாளர் ஐன்ஸ்டின், நிர்வாக தயாரிப்பாளர் சிஜோ ஜோசப் ஆகியோருடன் லண்டன் சென்றிருந்தனர். அங்குபுரமோஷனை முடித்துவிட்டு பைசெஸ்டர் வில்லேஜுக்கு (Bicester Village)ஷாப்பிங் சென்றனர்.

ஜோஜு ஜார்ஜ், தயாரிப்பாளர் ஐன்ஸ்டின், நிர்வாகதயாரிப்பாளர் சிஜோ ஜோசப் ஒரு காரிலும் கல்யாணி, செம்பன் வினோத் உள்ளிட்டோர் வேறொரு காரிலும் சென்றனர்.

அவர்கள் தங்களின் பாஸ்போர்ட், பர்ஸ் போன்றவற்றை காரில் வைத்துவிட்டு சென்றனர். ஷாப்பிங் முடித்துவிட்டு வந்தபோது ஜோஜு ஜார்ஜ், ஐன்ஸ்டின், சிஜோ ஜோசப் ஆகியோரின் பாஸ்போர்ட் மாயமானது தெரியவந்தது. மேலும் ஜோஜு ஜார்ஜின் 15000 பவுண்ட்டும் (ரூ.15 லட்சம்) திருடப்பட்டிருந்தது. இதையடுத்து இந்திய தூதரகம் அவர்களுக்கு தற்காலிக பாஸ்போர்ட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்