குழந்தைகளுடன் சைக்கிளிங்: கவனம் ஈர்க்கும் அஜித்தின் புதிய போட்டோ

By செய்திப்பிரிவு

சென்னை: நடிகர் அஜித்குமார் சென்னையில் குழந்தைகள் சிலருடன் சைக்கிளிங் செல்லும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

அஜித் நடிப்பில் லைகா தயாரிக்கும் புதிய படம் ‘விடாமுயற்சி’. இப்படத்தை முதலில் விக்னேஷ் சிவன் இயக்குவார் என தெரிவிக்கப்பட்டு பின்னர் மகிழ்திருமேனி பெயர் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது. இப்படம் விரைவில் தொடங்கப்படும் என்று லைகா நிறுவனம் அறிவித்தது. சமீபத்தில் நார்வே, டென்மார்க், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் தன்னுடைய பைக் பயணத்தை அஜித்குமார் நிறைவு செய்தார்.

இந்த நிலையில், சென்னையில் குழந்தைகள் சிலருடன் அஜித் சைக்கிளிங் செல்லும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. வெள்ளை நிற சட்டையும், ஜீன்ஸும் அணிந்தபடி அஜித் சைக்கிளில் செல்ல அவருடன் குழந்தைகள் சிலர் சைக்கிளில் பின் தொடர்கின்றனர். இதில் அஜித்தின் மனைவி ஷாலினி, அஜித்தின் குழந்தைகளான அனோஷ்கா மற்றும் ஆத்விக் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்