“சிறந்த நடிகர் விருது மூலம் வரலாறு படைத்துள்ளீர்கள்” - அல்லு அர்ஜூனுக்கு நடிகர் சூர்யா வாழ்த்து

By செய்திப்பிரிவு

சென்னை: “சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றதன் மூலம் வரலாறு படைத்துள்ளீர்கள்” என அல்லு அர்ஜூனுக்கு நடிகர் சூர்யா வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில், “சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றதன் மூலம் தெலுங்கு திரையுலகில் வரலாறு படைத்துள்ளீர்கள். உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். உங்களுக்கு கிடைத்த தகுதியான அங்கீகாரம் தேவிஸ்ரீபிரசாத். வாழ்த்துகள்” என தேசிய விருது பெற்ற அல்லு அர்ஜூன், தேவிஸ்ரீபிரசாத் ஆகிய இருவரையும் சூர்யா வாழ்த்தியுள்ளார்.

2021-ம் ஆண்டு சென்சார் செய்யப்பட்ட படங்களுக்கான 69-வது தேசிய திரைப்பட விருது அறிவிப்பு விழா டெல்லியில் இன்று நடைபெற்றது. இதில் சிறந்த நடிகருக்கான விருது அல்லு அர்ஜூனுக்கு ‘புஷ்பா’ திரைப்படத்துக்காக அறிவிக்கப்பட்டது. முன்னதாக ‘ஜெய்பீம்’ படத்துக்கு இந்த விருது கிடைக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் அந்த ஆசை நிறைவேறாமல் போனது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

மேலும்