சென்னை: விமல் நடிப்பில் ஆக்ஷன் த்ரில்லராக உருவாகியுள்ள ‘துடிக்கும் கரங்கள்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. விமல் நடிப்பில் வேலுதாஸ் இயக்கியுள்ள படம் ‘துடிக்கும் கரங்கள்’. விமலுக்கு ஜோடியாக மனிஷா நடித்துள்ளார். மேலும் சதிஷ், சுரேஷ் மேனன் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படத்துக்கு ராகவ் பிரசாத் இசையமைத்துள்ளார். ஆக்ஷன் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இப்படம் செப்டம்பர் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
ட்ரெய்லர் எப்படி? - பெரும்பாலும் காமெடி கலந்த சாதுவான பாத்திரங்களிலேயே நடித்து வந்த விமல் ‘மாஸ்’ ஆக்ஷன் ஹீரோவாக களமிறங்கியுள்ளார். காதலியை துரத்தி துரத்தி காதலிக்கும் லவ்வர் பாய் ஆக காட்டப்படும் விமல், சூழல் நிர்பந்தத்தால் ஆக்ஷன் அவதாரம் எடுக்கிறார். மாஸ் மசாலா படங்களுக்கே உரிய புழுதி பறக்கும் காட்சிகள், ஈர்ப்பு விசையை எதிர்த்து ஆட்கள் பறப்பது, ஹீரோயின் உடனான ரொமான்ஸ் பாடல் என அனைத்து அம்சங்களும் ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ளன. ‘துடிக்கும் கரங்கள்’ படத்தின் ட்ரெய்லர் வீடியோ:
முக்கிய செய்திகள்
சினிமா
49 mins ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago