“முன்பு மூன்றாம் உலக நாடு.. இன்று முதல் நாடு” - சந்திரயான்-3 வெற்றி குறித்து அமிதாப் பச்சன் பெருமிதம்

By செய்திப்பிரிவு

மும்பை: நீண்டகாலமாக மூன்றாம் உலக நாடு என்று குறிப்பிடப்பட்ட இந்தியா இன்று முதல் நாடாக இருப்பதாக நடிகர் அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார்.

நிலவை ஆய்வு செய்ய இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நேற்று (ஆக 23) மாலை வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது. இதன் மூலம் நிலவின் தென் துருவத்தை அடைந்த முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. இந்தியாவின் வெற்றியை ஒட்டுமொத்த உலகமும் கொண்டாடி வருகிறது. அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் சமூக வலைதளங்களில் ‘சந்திரயான்-3’ வெற்றி குறித்து பெருமிதம் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் சந்திரயான் 3 வெற்றி குறித்து பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: "நீண்டகாலமாக இந்தியா மூன்றாம் உலக நாடு என்றே குறிப்பிடப்பட்டு வந்தது. நான் அதை வெறுத்தேன். இன்று நான் பெருமையுடன் சொல்கிறேன் . இன்று இந்தியா ஒன்றுக்கும் மேற்பட்ட வழிகளில் முதல் நாடாக உள்ளது" என அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE