சந்திரயான் 3 விண்கலம் மூலம் இந்தியா நிலவில் தடம் பதித்திருக்கும் நிலையில் திரையுலகினர் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக இயக்குநர் ராஜமவுலி தனது ட்விட்டர் பக்கத்தில், “இதயம் பெருமையால் பூரிப்படைகிறது. கண்ணீர் கன்னங்களில் வழிகிறது. சந்திரயான் 3 வெற்றிகரமான தரையிறக்கம் விண்வெளியில் புதிய சகாப்தம்” என பதிவிட்டுள்ளார்.
நடிகர் அக்ஷய்குமார்: “கோடிக்கணக்கான இதயங்கள் இஸ்ரோவுக்கு நன்றி செலுத்துகின்றன. நீங்கள் எங்களை பெருமைபடுத்தியுள்ளீர்கள். இந்தியா வரலாறு படைப்பதை பார்ப்பது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம். நிலவில் இந்தியா. நாம் நிலவில் இருக்கிறோம்” என பதிவிட்டுள்ளார்.
தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு: “விண்வெளி அறிவியலில் இந்தியா மிகப்பெரிய மைல்கல்லை எட்டியதற்கு வாழ்த்துகள்!!” என தெரிவித்துள்ளார்.
குஷ்பு: “இஸ்ரோ ஹீரோக்களுக்கு சல்யூட்” என குஷ்பு பாராட்டு தெரிவித்துள்ளார்.
மாதவன்: “இந்த சாதனையை விவரிக்க வார்த்தைகளில்லை. என் இதயம் பெருமையால் ததும்கிறது” என நடிகர் மாதவன் தெரிவித்துள்ளார்.
சிரஞ்சீவி: “இந்தியாவுக்கு மிக முக்கியமான சாதனை. இன்று வரலாறு படைக்கப்பட்டது” என சிரஞ்சீவி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
மோகன்லால்: "முழு தேசத்தையும் பெருமைப்படுத்திய இஸ்ரோவுக்கு வாழ்த்துகள்" என நடிகர் மோகன்லால் தெரிவித்துள்ளார்.
சிலம்பரசன்: “நிலவில் வெற்றிகரமாக சந்திராயன் 3 விண்கலத்தை தரையிறக்கிய இஸ்ரோவுக்கு வாழ்த்துகள். இந்தியர்கள் பெருமைகொள்ளும் வரலாற்று சிறப்பு மிக்க நாள். நட்சத்திரம், நிலவுக்கு அப்பால் உயரத்தை அடையமுடியும் என்ற நம்பிக்கையை கொடுத்த தருணமிது” என ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago