சென்னை: விமல் நடிப்பில் உருவாகி நீண்ட நாட்களாக வெளியாகாமல் இருந்த ‘துடிக்கும் கரங்கள்’ திரைப்படம் செப்டம்பர் 1-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விமலுக்கு சமீபகாலமாக பெரிய அளவில் படங்கள் கைகொடுக்கவில்லை. இறுதியாக அவர் நடிப்பில் வெளியான ‘விலங்கு’ வெப்சீரிஸ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ‘தெய்வமச்சான்’, ‘குலசாமி’ படங்கள் பெரிய அளவில் கைகொடுக்கவில்லை.
இந்நிலையில் நடிகர் விமல் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் ‘துடிக்கும் கரங்கள்’. இந்தப்படத்தை வேலுதாஸ் இயக்கியுள்ளார். இதில் விமலுக்கு ஜோடியாக மும்பை மாடல் மனிஷா நடித்துள்ளார். மேலும் சதிஷ், சுரேஷ் மேனன் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படத்துக்கு ராகவ் பிரசாத் இசையமைத்துள்ளார்.
ஆக்ஷன் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இப்படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டு வந்த நிலையில் தற்போது செப்டம்பர் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
23 mins ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago