“கேட்டேன்.. கொடுத்துட்டார்” - நடிகர் ஜாஃபருக்கு ‘ஜெயிலர்’ கண்ணாடியை பரிசளித்த ரஜினி

By செய்திப்பிரிவு

சென்னை: ‘ஜெயிலர்’ படத்தில் தான் அணிந்திருந்த கூலிங் கிளாஸை ரஜினி தனக்கு பரிசளித்ததாக நடிகர் ஜாஃபர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ‘ஜெயிலர்’. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இதில் ரம்யா கிருஷ்ணன், விநாயகன், மோகன்லால், சிவராஜ்குமார் உட்பட பலர் நடித்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியான இந்தப் படம் பலத்த வரவேற்பைப் பெற்றுவருகிறது. இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் ஜாஃபர். இவர் ‘வெந்து தணிந்தது காடு’, ‘விக்ரம்’ உள்ளிட்ட படங்களில் நடித்துப் பிரபலமானவர்.

இந்த நிலையில் ‘ஜெயிலர்’ படத்தில் தான் அணிந்திருந்த கூலிங் கிளாஸை ரஜினி தனக்கு பரிசளித்ததாக நடிகர் ஜாஃபர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது குறித்த புகைப்படங்களை பகிர்ந்துள்ள அவர், அதில் ‘நான் கேட்டேன்.. அவர் கொடுத்துட்டார்” என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

ரஜினியின் ‘ஜெயிலர்’ படம் வெளியான முதல் நாளில் இருந்தே வசூல் சாதனை படைத்து வருகிறது. உலகம் முழுவதும் இதுவரை இப்படம் ரூ.500 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE